“வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்க தீர்மானம்

#SriLanka #Home #Lanka4
Kanimoli
2 years ago
“வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்க தீர்மானம்

இந்த வருடத்திற்குள் சுற்றுலா தலங்கள் உள்ள இடங்களில் “வாடி வீடு” என்ற பெயரில் 100 புதிய வாடி வீடுகள் திறக்கப்படும் என லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் துலிப் விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த வாடி வீடுகள் சுற்றுலா சபை மற்றும் தனியார் துறையின் ஒப்பந்தத்தில் நடத்தப்பட உள்ளதாக தலைவர் வலியுறுத்தினார்.

 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி, மாத்தறை, பேராதனை உள்ளிட்ட தற்போது 25 வாடி வீடுகள் தமது நிறுவனத்தின் கீழ் இயங்கி வருவதாக லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார். வாடி வீடுகளுக்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!