அதிக வெப்பம் காரணமாக புற்றுநோய் உருவாகும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

#SriLanka #weather #hot
Mayoorikka
2 years ago
அதிக வெப்பம்  காரணமாக புற்றுநோய் உருவாகும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இன்றைய நாட்களில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என தோல் நோய் வைத்திய நிபுணர் நயனி மதரசிங்க தெரிவித்துள்ளார்.

 கிரீம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் சருமத்தில் கடுமையான சூரிய ஒளியின் விளைவுகளை குறைக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

 கடும் சூரிய ஒளியால் புற்றுநோய் உருவாகும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர் நிபுணர் நயனி மதரசிங்க எச்சரித்துள்ளார்.

 “அதிக வெப்பம் நிலவும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

 ஆனால் நீங்கள் அந்த நேரத்தில் வௌியே கட்டாயம் செல்ல விரும்பினால், வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான முறைமைகளை பின்பற்ற வேண்டும்.

 இதற்காக தலையில் தொப்பி, குடை மற்றும் சருமத்திற்கான சன் கிரீம்களை பயன்படுத்துவது அவசியமாகும்” என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!