வரட்சியின் காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை - அதிகாரி தெரிவிப்பு

#SriLanka #Fish #Mullaitivu #Lanka4 #pressmeet
Kanimoli
2 years ago
வரட்சியின் காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை - அதிகாரி தெரிவிப்பு

கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ் மாவட்ட நீர உயிரினவழர்ப்பு விரிவாக்கள் உத்தியோகத்தர் சங்கீதன் ஊடக சந்திப்பு ஒன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தார். குறித்த ஊடக சந்திப்பு கிளிநொச்சியில் அமைந்துள்ள நீரியல் வள திணைக்களத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் அவர் தெரிவிக்கையில், தற்பொழுது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக எந்த ஒரு குளத்திலும் மீன்கள் இறக்கவில்லை. 

அண்மையில் மல்லாவி குளத்தில் விடப்பட்ட மீன் குஞ்சுகள் இறந்ததாக பேசப்பட்ட செய்தி முற்றிலும் பொய்யாது. மல்லாவி குளத்தில் மீன் குஞ்சுகள் இதுவரையில் விடப்படவில்லை. அக்குளத்தில் உள்ள மீன் இனங்கள் கால்வாயின் ஊடாக வெளியேறி இறந்துள்ளது. எந்த ஒரு குளத்திலும் நன்னீர் மீன்களுக்கான நோய்கள் ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

 மேலும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் மீனவ சங்கத்தின் ஊடாக பதிவு செய்திருத்தல் வேண்டும். அப்படி இதுவரை காலமும் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக நன்னீர் மீனவர் சங்கத்தில் தமது பதிவினை மேற்கொள்ள வேண்டும். 

 அத்தேடு தமது பகுதிகளில் உள்ள குளங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் நடைபெறுவதினை கண்டால் உடனடியாக நீரியல் திணைக்களத்தினருக்கு தெரிவிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!