விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த இருவர் கைது

#SriLanka #Arrest #drugs #sports
Prasu
2 years ago
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த இருவர் கைது

விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் பாணந்துறை வலான ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸ் பிரிவில் நேற்று (16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் 38,000 ரூபாய்க்கு ஊக்க மருந்து, ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்யச் சென்றவேளை கைது செய்யப்பட்டு, வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளை இலங்கைக்கு சட்ட விரோதமான முறையில் இறக்குமதி செய்த நிறுவனம் தொடர்பிலும் தெரியவந்துள்ளது.

 அந்த தகவலின் அடிப்படையில், தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிலைய அதிகாரிகள் பொரளை பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தி மற்றுமொருவரை கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!