பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவுடனான சந்திப்பு இடம்பெற்றது.

#SriLanka #Ali Sabri #Lanka4
Kanimoli
2 years ago
பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவுடனான சந்திப்பு  இடம்பெற்றது.

பலஸ்தீன ஒற்றுமைக்கான இலங்கைக் குழுவுடனான சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. பலஸ்தீன மக்கள் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகள் மற்றும் நிலைமைகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் விளக்கி கூறியதுடன், அந்நாட்டின் சீரற்ற நிலைமையையும் சுட்டிக் காட்டினார்கள்.

 பலஸ்தீன மக்கள் தினம்தோறும் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் அலசப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலின் போது பலஸ்தீன மக்களுக்கான சுயாதீன உரிமையின் அடிப்படைக் கொள்கைக்கான இலங்கையின் உறுதியான உறுதிப்பாட்டை அமைச்சர் அலி சப்ரி அவ்விடத்தில் வலியுறுத்தியோடு, 

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைவாக இரு நாடுகளின் கட்டமைப்பின் ஊடாக விரைவான தீர்மானத்தின் அழுத்தமான தேவையையும் வலியுறுத்தப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!