ஒரு மாதத்திற்கும் குறைவான நெல் இருப்பு மாத்திரமே உள்ளது

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4
Kanimoli
2 years ago
ஒரு மாதத்திற்கும் குறைவான நெல் இருப்பு மாத்திரமே உள்ளது

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் ஒரு மாதத்திற்கும் குறைவான நெல் இருப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. 45 இலட்சம் கிலோ நெல் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை வசம் இருப்பதாக அதன் தலைவர் புத்திக இத்தமல்கொட கூறுகிறார்.

 அரிசி கிடைக்காத காரணத்தினால் மூடப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை அரிசி கடைகளை விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தால் அவற்றை திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்தார்.

 இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நாளை (18) ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் புத்திக இத்தமல்கொட தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!