குருந்தூர்மலை விவகாரம் : பௌத்த - இந்து மோதல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
குருந்தூர்மலை விவகாரம் : பௌத்த - இந்து மோதல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி குருந்தூர் மலைப்பகுதியில் விகாரை அமைக்க வரவுள்ளதாக தமிழ் அரசியல்வாதிகளுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (16.08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “குருந்தூர்மலை 2200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்துக்கோவில் என்று தமிழ் அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.  

தமிழ் பிரிவினைவாதிகள் இந்த இடத்தை கல்வெட்டுகள், தொன்மைகள், வரலாற்று நூல்கள் மூலம் பௌத்த ஆலயம் என உறுதிப்படுத்திய இந்த இடத்தை இந்து கோவிலாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பௌத்த - இந்து மோதலைத் தடுக்க தமிழ் தீவிரவாதிகளை தடுத்து நிறுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!