சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - தைவான் துணை அதிபர்

#China #Warning #Thaiwan
Prasu
2 years ago
சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - தைவான் துணை அதிபர்

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.சமீபத்தில் தைவானை சுற்றி கடலில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.

அதேபோல் தைவானுடன் அமெரிக்கா இணைந்து பயிற்சிகளை மேற்கொள்கிறது. இதற்கிடையே தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய், பராகுவே நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அங்கு புறப்பட்டு சென்றார். 

வழியில் அவர் அமெரிக்காவில் நியூயார்க் நகருக்கு சென்றார். அவரது அமெரிக்க பயணத்துக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் சீனாவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று தைவான் துணை அதிபர் வில்லி யம்லாய் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தைவானின் நீண்ட கால உயிர் வாழ்வை சர்வதேச சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய ஒன்றாகும். தைவானுக்கு சர்வாதி காரத்தின் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் நாங்கள் முற்றிலும் அடிபணிய மாட்டோம். பயப்படமாட்டோம். ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் மதிப்புகளை நிலைநிறுத்துவோம்" என்றார்.

மேலும் தைவான் அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தைவான் பாதுகாப்பாக இருக்கும் போது உலகம் பாதுகாப்பாக இருக்கும். தைவான் ஜலசந்தியில் அமைதி நிலவும் போது, உலக அமைதி நிலவும் என்று தெரிவித்து உள்ளது. நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் போராளிகள் என்ற பெயரில் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, தாக்குவது, பொதுமக்களை கடத்துவது, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களை பிடிக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய நைஜீரியாவில் கிரிமினல் குழுவை சேர்ந்தவர்கள் திடீரென்று ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். ராணுவ வீரர்களும் கடும் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ராணுவம் தரப்பில் கூறும்போது, மத்திய நைஜீரியாவில் நடந்த தாக்குதலில் மூன்று அதிகாரிகள் உள்பட 26 வீரர்களை இழந்துள்ளோம். 8 பேர் காயம் அடைந்தனர்.

தாக்குதல் நடத்திய கிரிமினல் குழுவிலும் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தது. இதற்கிடையே காயம் அடைந்த ராணுவ வீரர்களை மீட்பதற்காக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. அந்த ஹெலிகாப்டர், காயமடைந்தவர்களில் 7 பேரையும், பலியானவர்களில் 11 பேரின் உடல்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது. 

ஹெலிகாப்டரின் தொடர்பு திடீரென்று துண்டானது. பின்னர் அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது தெரிய வந்தது. இது தொடர்பாக அரசின் செய்தி தொடர்பாளர் எட்வர்ட் காப்க்வெட் கூறும்போது, ஹெலிகாப்டர், சுங்கேரு ஆரம்ப பள்ளியில் இருந்து கடுனா பகுதிக்கு புறப்பட்டது. அந்த ஹெலிகாப்டர், சுகுபா கிராமம் அருகே விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!