ஈக்வடார் நாட்டில் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக்கொலை

#Death #Election #GunShoot
Prasu
2 years ago
ஈக்வடார் நாட்டில் ஒரு அரசியல் தலைவர் சுட்டுக்கொலை

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் வருகிற 20-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் ஈக்வடாரில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். 

அவர் சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4