ஜனாதிபதி சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Udaya Kammanpila
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

 கொழும்பு – கோட்டையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது அதிகாரப் பகிர்வின் மூலமாக தனது சுயநல அரசியலையே முன்னெடுப்பதற்கு தயாராகி வருகின்றார்.

 அவர் அதிகாரங்களைப் பகிர்வதாகக் கூறி, மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகளுக்கு தேர்தலை நடத்தாது தனது தேர்தல் பரப்புரைக்காக ஆளுநர்கள் மற்றும் இதர தரப்பினருக்கு அதிகாரங்களை வழங்குவதற்கு முயல்கின்றார்.

 ஆகவே இந்தச் செயற்பாடானது அதிகாரத்தினைப் பகிரும் செயற்பாடு அல்ல. அதிகாரத்தினை குவிப்பதாகும். 

அந்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். மேலும், அதற்கு நியாயமான பதில் அளிக்கப்பாடாது சர்வகட்சிக் கூட்டத்தினை நடத்துவதில் எவ்வித பயனுமில்லை என்ற முடிவினை நாம் கொண்டுள்ளோம் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!