சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

#India #PrimeMinister #Tamil People #people #Independence #Day #2023 #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்

இந்தியாவின் சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். இதையடுத்து, தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1,000 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. டெல்லி செங்கோட்டையில் ட்ரோன்கள் பறக்க அனுமதி இல்லை.

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்கள் 1,800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியைக் காண சுமார் 30 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தர உள்ளனர். தேசிய பாதுகாப்புப் படை, மத்திய பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் டெல்லி காவல்துறை இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4