இமாச்சலில் விடாமல் கொட்டும் கனமழை.. 7 பேர் பலி!

#Death #Rain #HeavyRain #land #Died #Mountain
Mani
2 years ago
இமாச்சலில் விடாமல் கொட்டும் கனமழை.. 7 பேர் பலி!

இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டது, இதனால் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் மாம்லை கிராமத்தில் உள்ள வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பலியாகினர். வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேகவெடிப்பு சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ள இமாசல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது: "மேக வெடிப்பால் 7 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்த அவர், இந்த சவாலான காலகட்டத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4