சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற ராணுவம்

#India #Death #world_news #Attack #Somalia #Terrorist #2023 #Tamilnews #Died #Killed
Mani
2 years ago
சோமாலியாவில் 23 பயங்கரவாதிகளை துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்ற ராணுவம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இதையடுத்து, அவர்களை ஒழிக்க ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வளைகுடா பகுதியான புலா-புலே அருகே இந்த ரோந்துப் பணிகளில் ஒன்றில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து ராணுவத்தினர் அங்கு சுற்றி வளைத்து சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் அல்-ஷபாப் அமைப்பை சேர்ந்த 23 பயங்கரவாதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

அதன்பிறகு வெடிகுண்டு, கைத்துப்பாக்கி போன்ற பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அவர்களது முகாம்களை அழித்ததாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4