வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

#India #Flight #Airport #Birds #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
வங்காளதேசத்தில் பறவை மோதியதால் இரு விமானம் அவசரமாக தரையிறக்கம்

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து செல்லும் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில், ஒரு பறவை விமானத்தின் மீது மோதியது. இதில் விமானத்தின் ஒரு டயர் வெடித்ததால் உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதேபோல் மற்றொரு விமானத்தின் மீது பறவை மோதியதில் அதன் சில எந்திரங்கள் சேதமடைந்தன.

இதையடுத்து, விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் வேறு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை..

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4