வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்: மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எழுந்த கண்டனம்

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
2 years ago
வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்:  மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எழுந்த கண்டனம்

தமிழர்களுக்கு எதிராக மேர்வின் சில்வா தெரிவித்துள்ள கருத்திற்கு கண்டனங்கள் வெளியாகியுள்ளன.

 முன்னாள் அமைச்சர் உரையாற்றும் வீடியோ ஊடகமொன்றின் செய்தியில் வெளியாகியுள்ளது.

 விகாரைகள்மீது கைவைத்தால் வடக்கு கிழக்கில் உள்ளவர்களின் தலைகளை களனிக்கு கொண்டுவருவேன்என அதில் மேர்வின் சில்வா தெரிவிப்பதை காணமுடிகின்றது.

 மேர்வின் சில்வாவின் இந்த கருத்திற்காக அவருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாதா என சமூக ஊடக பயனாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார் அரசாங்கம் நகைச்சுவை கலைஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றது தேசிய கீதத்தை தவறாக பாடியவர்களை விமர்சிக்கின்றது இங்கு முன்னாள் அமைச்சர் தமிழர்களின் தலைகளை துண்டிப்பேன் என வெளிப்படையாக தெரிவிக்கின்றார் இவருக்கு எதிராக நடவடிக்கை இல்லையா என மற்றுமொரு சமூக ஊடக பயனாளர் பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!