பாகிஸ்தானின் விடுதலை ராணுவத்தினர், சீனர்களை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல்

#world_news #Pakistan #Lanka4
Kanimoli
2 years ago
பாகிஸ்தானின் விடுதலை ராணுவத்தினர், சீனர்களை குறிவைத்து இன்று தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தானில் உள்ளூர் பிரிவினைவாதக் குழுவான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், சீன நாட்டினரை குறிவைத்து இன்று பலுசிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

 பலுசிஸ்தானின் குவாதர் துறைமுக நகரத்தில் சீன பொறியாளர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் குறைந்தது 4 சீனர்கள் மற்றும் 9 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இது தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!