இறால் பண்ணை உரிமையாளர் கலந்துரையாடல் : அமைச்சர் டக்ளஸ் தலைமையில்
இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் (SLADA) மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் கடற்தொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா, அவர்களும், நெக்டா, நாரா நிறுவனங்களின் அதிகாரிகள், இறால் பண்ணைகளின் உரிமையாளர்கள், கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது இறால் பண்ணைகளில் ஏற்படும் தொற்றுக்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
தொற்று ஏற்படுமிடத்து விரைவாக பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும், தீர்வுகளை வழங்குவதற்கும் அதிகாரிகள் தேவையை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.