கரும்பு தோட்டத்தில் நெற் செய்கை பயனாளிகள் மீளாய்வு கூட்டம்

#SriLanka #Meeting #Kilinochchi #Lanka4 #இலங்கை #லங்கா4
கரும்பு தோட்டத்தில் நெற் செய்கை பயனாளிகள் மீளாய்வு கூட்டம்

அக்கரையான் கரும்பு தோட்ட நெற் செய்கை பயனாளிகளுக்கான மீளாய்வு கூட்டம் ஸ்கந்தபுரம் பொது நோக்கு மண்டபத்தில் இன்று(12) நடைபெற்றது. இச் சந்திப்பில் அக்கரையான் பகுதியை சூழவுள்ள அயல்கிராமங்களில் செயற்பாட்டில் இருக்கும் 11 உற்பத்தி சார் சமுக மட்ட அமைப்புக்களில் இருந்து தெரிவான 30 க்கும் அதிகமான பயனாளிகள் கலந்து கொண்டு அடுத்த கால போக நெற்செய்கை பயனாளிகள் தெரிவு மீதான தமது கருத்துக்களை முன் வைத்தனர். 

 கரும்பு தோட்ட புதிய கமக்காரர் அமைப்பு தலைவரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சந்திப்பில் தெரிவான பயனாளிகள் விடயத்தில் பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவகர் அலுவலகம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்ப்பதால் பயனாளிகள் தெரிவு முறையில் பொது மக்களின் விமர்சனங்களை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டியதன் அவசியமும் இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

images/content-image/1691856055.jpg 

மீதியாகவுள்ள நெற் காணிகளுக்கு பயனாளிகளை தெரிதல் மற்றும் பட்டியலில் அவசியமான மாற்றங்கள் ஏதுமிருப்பின் கருத்துக்களை தெரிவிக்குமாறு மாவட்ட அமைப்பாளர் வை. தவநாதன் அமைப்பின் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டார்.

 பயனாளிகள் தெரிவில் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக நலிவுற்ற குடும்பங்களை பயனாளிகளாக இணைத்துக் கொள்வது அவ்வாறே காணியை பயிற் செய்கைக்காக தவறாது பயன்படுத்துவது மற்றும் காணியை கைமாற்றாது தெரிவான பயனாளிகளே பயிற்செய்கையை தொடர்ந்து முன்னெடுப்பது அதன்மூலமான தமக்கான வருமானங்களை வாழ்வாதாரத்தை அவர்களே மேம்படுத்திக் கொள்வதன் அவசியத்தை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் இச் சந்திப்பில் கலந்து கொண்டு வலியுத்தினார்.

images/content-image/1691856162.jpg

 திருத்தம் செய்யப்பட்ட இறுதி பயனாளிகள் பட்டியலை விரைவில் அந்தந்த அமைப்புக்களின் கவனத்துக்காக கையளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!