மியன்மாரில் கனமழையால் 5 பேர் பலி 40,000 பேர் வெளியேற்றம்

#India #world_news #Flood #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
மியன்மாரில் கனமழையால் 5 பேர் பலி 40,000 பேர் வெளியேற்றம்

மியான்மரில் தற்போது பருவமழை காரணமாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் 5 பேர் பலியாகியுள்ள போதிலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

யங்கோனின் வடகிழக்கே உள்ள பாகோவில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான நபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையில், பெருகிவரும் வெள்ளத்திற்கு மத்தியில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றுவதில் மீட்புக்குழுவினர் முனைப்புடன் பணியாற்றினர்.

இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.

கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4