கொழும்பில் 2 இலட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் பாவனையாளர்கள்

#SriLanka #Colombo #drugs
Prathees
2 years ago
கொழும்பில் 2 இலட்சத்திற்கும் அதிகமான போதைப்பொருள் பாவனையாளர்கள்

தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபை சமர்ப்பித்த அறிக்கையின்படி, கொழும்பு மாவட்டத்தில் 200,000க்கும் அதிகமானோர் பல்வேறு போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாக மேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

 நுகேகொடை, களனி மற்றும் மவுண்ட் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வு பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

 பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலணியொன்றை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!