ஒரே நாளில் ரசிகர்களை கவர்ந்த சந்திரமுகி-2 பாடல்

#Cinema #Tamil Nadu #TamilCinema #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
ஒரே நாளில் ரசிகர்களை கவர்ந்த சந்திரமுகி-2 பாடல்

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் "சந்திரமுகி-2". இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளது. லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஜோடியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'ஸ்வாகதாஞ்சலி' பாடல் நேற்று வெளியாகி பிரபலமடைந்தது. குறிப்பாக, இந்தப் பாடல் ஒரு நாளில் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், படக்குழுவினர் ஒரு போஸ்டரையும் பகிர்ந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!