லொறி டிரைவரின் அலட்சியத்தால் டியூஷன் ஆசிரியர் பலி

#SriLanka
Prathees
2 years ago
லொறி டிரைவரின் அலட்சியத்தால் டியூஷன் ஆசிரியர் பலி

கனதுல்ல பிரதேசத்தில் லொறியொன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த டியூஷன் ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக குளியாபிட்டிய பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

 தும்மலசூரிய பிரதேசத்தை சேர்ந்த முப்பத்தாறு வயதுடைய நிஷங்க வைத்தியரத்ன, லங்காதிலக வைத்தியரத்ன என்ற டியூஷன் ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 கடந்த 09ஆம் திகதி காலை இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த கோர விபத்தில் குளியாப்பிட்டியவிலிருந்து உடுபத்தாவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அதே திசையில் பின்னால் வந்த பத்து சக்கர லொறியுடன் மோதியது.

 லொறியின் சாரதி வீதியில் உரிய கவனத்துடன் வாகனத்தை செலுத்தவில்லை என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 முதல் பார்வையில் பிரேக் போட்டதற்கான அறிகுறியே இல்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

 எவ்வாறாயினும், குறித்த ஆசிரியரை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஏற்பாடு செய்திருந்தனர்.

 அதற்குள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 36 வயதுடைய சந்தேகநபர் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குளியாபிட்டிய நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!