கடும் வெப்பம் நிலவிய அநுராதபுரத்தில் மழை கொட்டித்தீர்த்தது!
#SriLanka
#Anuradapura
#Rain
#Lanka4
Thamilini
2 years ago
பல மாதங்களாக வரட்சியாக இருந்த அநுராதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை (11.08) பல பிரதேசங்களில் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களாக மழையின்மை காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. இதனால் பல சிறிய குளங்கள் வறண்டு காணப்பட்டன.
மேலும் மாவட்டம் முழுவதும் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டதாகவும், நேற்று பெய்த மழையால் குளிர்ச்சியான காலநிலை நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அநுராதப்புரம் மாவட்டத்தில் இன்றும் (12.08) மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.