ரஷ்யாவில் புலம்பெயர் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
மாஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமையுடன் (SLFEA) இணைந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாயப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த முயற்சியில் கீழ் முதல் முறையாக 58 தையல்காரர்கள் முன்னணி ஜவுளி ஆலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு 700 இற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு Nizhny Novgorod இல் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் அங்கீகாரம் பெற்ற பிற நாடுகளில், பல தொழில்நுட்ப வகைகளின் கீழ், இலங்கையின் திறமையான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் மாஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.