மிஹிந்தலையில் மின்னல் தாக்கி மூவர் பலி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்மென்ன வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
கங்குருவ மற்றும் சீப்புக்குளம் பகுதியில் வசிக்கும் 44, 45 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றின் கரையில் அமர்ந்திருந்த போது மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதாகவும், பின்னர் அவர்கள் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் குறித்த மூவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்ததாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.