எதிர்வரும் சில நாட்களில் மின்தடை ஏற்படும்!

#SriLanka #Lanka4 #power cuts
Thamilini
2 years ago
எதிர்வரும் சில நாட்களில் மின்தடை ஏற்படும்!

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் இரண்டரை மணித்தியால மின்வெட்டு ஏற்படுவதற்கான  வாய்ப்புகள்  உள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட  பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

அவசர கொள்முதலுக்கு சென்றால் அந்தந்த தனியார் மின் உற்பத்தி நிலையங்களுடன் ஒரு வருட ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் நந்திக பத்திரகே கூறியுள்ளார். 

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

எனவே, தற்போதுள்ள அனைத்து நிபந்தனைகளையும் கருத்தில் கொண்டு, சுமார் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டுக்கு செல்வதே பொருத்தமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்கள் வேகமாக வடிந்து வெளியேறியதாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களும் அமைப்பில் இருந்து வெளியேறியதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

எவ்வாறாயினும், மின்சாரம் துண்டிக்காமல் தொடர்ந்தும் வழங்குங்குவதற்கான  திட்டம் மின்சார சபைகளிடம் ஏற்கனவே உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன  விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!