சிங்கராஜ வனப்பகுதியில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்ட 03 ஈரானியர்களுக்கு நேர்த்த கதி!

#SriLanka #Court Order #Lanka4
Thamilini
2 years ago
சிங்கராஜ வனப்பகுதியில் அத்துமீறிய செயல்களில் ஈடுபட்ட 03 ஈரானியர்களுக்கு நேர்த்த கதி!

சிங்கராஜ வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கு  ஒரு கோடியே முப்பத்திரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்தித்து உடுகம நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 44 இலட்சம் ரூபா அபராதம் விதித்தும்  நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

ஈரானிய பிரஜைகள் மூவரும் அண்மையில் நெலுவ லங்காகம பிரதேசத்தில் சிங்கராஜா வனப்பகுதியில் இருந்து தாவர மற்றும் விலங்குகளின்  பாகங்களை சேகரித்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். 

வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!