லக்ஷ்மன் கதிர்காமரின் 18வது நினைவு தினம் இன்று
பிரபல இராஜதந்திரி லக்ஷ்மன் கதிர்காமரின் 18வது நினைவு தினம் இன்று (12ம் திகதி) அனுஷ்டிக்கப்படுகிறது.
1994 பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவான திரு.கதிர்காமர் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சரானார்.
இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக அவர் பெரும் அர்ப்பணிப்பை மேற்கொண்டார் விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் இலங்கையிலும் உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக பெயரிடுவதில் சிறப்புப் பங்காற்றினார்.
அதேபோன்று, 2001 ஆம் ஆண்டு முதல் எதிர்கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய கதிர்காமர், 2004 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12, 2005 வரை வெளிவிவகார அமைச்சராக பணியாற்றினார்.
பிறப்பால் இந்துவாக இருந்த கதிர்காமர் அவர்கள், வெசாக் பண்டிகையை சர்வதேச விடுமுறையாக ஆக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்மொழிந்து, அன்றைய தினத்தை சர்வதேச விடுமுறையாக மாற்றுவதற்கு முதன்மையாக உழைத்தார்.
2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு விஜேராம வீதியிலுள்ள அவரது இல்லத்தின் நீச்சல் குளத்தில் இருந்தபோது லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.