மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை

#Switzerland #Malasia #company
Prasu
2 years ago
மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் சுவிட்சர்லாந்து நிறுவன தயாரிப்புகளுக்கு தடை

மலேசியாவில் ஓரின சேர்க்கை என்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. 

இந்த சூழலில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த கைக்கெடிகார தயாரிப்பு நிறுவனம் தங்களின் தயாரிப்புகள் மூலமாக மலேசியாவில் ஓரின சேர்க்கையை ஊக்குவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த மே மாதம் மலேசியாவில் உள்ள சுவிட்சர்லாந்து நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. 

இதில் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த கைக்கெடிகாரங்கள், கெடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் குறிப்பிட்ட அந்த சுவிட்சர்லாந்து நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மலேசியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி அந்த நிறுவனத்தின் கைக்கெடிகாரங்கள் மற்றும் கெடிகாரங்களை வைத்திருக்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மலேசியா அரசு எச்சரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4