சென்னையில் திடீர் கனமழை!

#India #Rain #2023 #Tamilnews #Chennai
Mani
2 years ago
சென்னையில் திடீர் கனமழை!

தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும்(மே 10, 11) சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று மாலை சென்னையில் பரவலாக கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அடித்துப் பெய்த மழை தற்போதும் தூரல் போட்டுக் கொண்டே இருக்கிறது. வெப்பம் தணிந்து மக்களை மகிழ்வித்துள்ளது. அதேவேளையில், திடீர் கனமழையால் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கிண்டி, ஆலந்தூர்,வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4