கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையிலா தீர்மானம் குறித்த விவாதம் நாளை நடைபெறும்!

#SriLanka #Keheliya Rambukwella #Lanka4
Thamilini
2 years ago
கெஹலியவிற்கு எதிரான நம்பிக்கையிலா தீர்மானம் குறித்த விவாதம் நாளை நடைபெறும்!

சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாளை (11.08) வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குழு வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதன்படி, முன்னைய நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் வழமை போன்று இந்த வாரமும் பாராளுமன்ற நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. 

சுகாதார அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4