சீனாவில் வெள்ள பாதிப்பு பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

#India #China #Death #world_news #Flood #Tamilnews #Breakingnews #Died #ImportantNews
Mani
2 years ago
சீனாவில் வெள்ள பாதிப்பு பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

பீஜிங் நகரம்,

டோக்சுரி புயல் தென் சீனாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங், ஹெபெய், தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷாங்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பரவலாக தண்ணீர் தேங்கியுள்ளது.

முக்கிய ஆறுகளில் தண்ணீர் அபாய அளவை விட தாண்டி ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பீஜிங் துணை மேயர் சியா லின்மாவோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வெள்ளத்தில் சிக்கி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 18 பேர் மாயமாகி உள்ளனர். மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழைக்கு 59 ஆயிரம் வீடுகள் சரிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட 1,50,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. 37 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

100க்கும் மேற்பட்ட பாலங்கள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். சேதத்தின் அளவைப் பொறுத்து முழுமையான மீட்புக்கான நேரம் மாறுபடலாம் மற்றும் 3 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4