சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கற்பழித்த இந்தியருக்கு 18 ஆண்டுகள் சிறை

#Arrest #Police #world_news #Lanka4 #Singapore
Kanimoli
2 years ago
சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கற்பழித்த இந்தியருக்கு 18 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூரில் குற்றச்செயல்களுக்கு தண்டனை அனுபவித்து மறுபடியும் அதே குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்தியாவை சேர்ந்த மார்க் கலைவாணன் என்பவர் கற்பழிப்பு வழக்கில் 16 வருடம் சிறை தண்டனை அனுபவித்து கடந்த 2017-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். 

ஆனால் சிறையில் இருந்து விடுதலையான சிறிது நேரத்திலேயே ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பணிப்பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது 

இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கலைவாணனுக்கு 18 ஆண்டுகள் தடுப்பு காவல் சிறை தண்டனையும், 12 பிரம்படி வழங்கவும் உத்தரவிட்டு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4