14 வயது மாணவரை 25 முறை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியை! 600 ஆண்டு சிறைதண்டனை!

அமெரிக்காவில் 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 74 வயது ஆசிரியைக்கு கடுமையான சிறை தண்டனை வழங்கப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் தோமாஹாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றியவர் அன்னே நெல்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னிடம் படித்த 14 வயது சிறுவனை பள்ளியின் அடித்தளத்திற்கு அழைத்துச் சென்று 25 முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.
குற்றம் நடந்த காலத்தில் இவருக்கு வயது 67. அந்த சிறுவனுக்கு 14 வயது. இது தொடர்பாக வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது. ஆசிரியை மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவருக்கான தண்டனை விவரங்கள் வருகின்ற அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார் .
இந்த வழக்கு தொடர்பாக அந்த ஆசிரியைக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட இருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் கூறியிருக்கிறார். அவருக்கு அதிகபட்சமாக 600 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.



