வங்கிகளுக்கு விரைவில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என அறிவிப்பு

#India #Tamil Nadu #Tamil People #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
வங்கிகளுக்கு விரைவில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என அறிவிப்பு

வங்கிகளுக்கு தற்போது வங்கிகள் மாதத்தின் முதலாவது, மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளை வேலை நாட்களாகவும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகவும் செயல்படுகின்றன. இருப்பினும், அனைத்து சனிக்கிழமைகளையும் வங்கி விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு வங்கிகளைச் சேர்ந்த ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதை ஏற்றுக்கொண்ட இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு, ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கைக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இனி வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே, அதாவது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே செயல்படும்.

சனிக்கிழமைகள் விடுமுறை காரணமாக, மற்ற தினசரி 5 வேலை நாட்களில் கூடுதலாக 45 நிமிடங்கள் வங்கி செயல்பாடு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வங்கி ஊழியர்களின் இந்த கோரிக்கையை நிதி அமைச்சகம் ஏற்றுக் கொள்ளப்படும் என சங்கத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4