மீண்டும் வீதிக்கு இறங்கவுள்ள மக்கள் : ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட புலனாய்வு அறிவிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
மீண்டும் வீதிக்கு இறங்கவுள்ள மக்கள் : ஜனாதிபதியிடம் வழங்கப்பட்ட புலனாய்வு அறிவிக்கை!

வறட்சி மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக எழுந்துள்ள அமைதியின்மையின் ஊடாக புதிய போராட்ட அலையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதிக்கு இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.

இந்த எதிர்ப்பு அலையை முன்னெடுக்க  குழுவொன்று இணைந்துள்ளதாகவும், மக்களை வீதிக்கு இறக்கி கடந்த வருடம் இருந்த நிலைமையை மீண்டும் நாட்டில் கொண்டுவர அவர்கள் செயற்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு தண்ணீர் தருவதில்லை என்றும், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் காட்டி மக்களை தண்ணீருக்காகப் போராட வீதிக்கு இறக்க குறித்த குழு முயற்சிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4