ஒரே நேரத்தில் 10 இளம்பெண்களை திருமணம் செய்த 28 வயது வாலிபர்!

#India #America #world_news #Marraige #wife #Tamilnews #ImportantNews
Mani
2 years ago
ஒரே நேரத்தில் 10 இளம்பெண்களை திருமணம் செய்த 28 வயது வாலிபர்!

10 இளம்பெண்களை ஒரே நேரத்தில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் லஸ்டின் இமானுவேல் என்பவர் மசாஜ் ஊழியராக பணியாற்றி வருகிறார். 28 வயதான இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். இப்படியிருக்கையில் கடந்த 31-ந் தேதி 10 இளம்பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இந்த திருமண விழாவை அவர் கடற்கரையில் தனது 10 மனைவிகளுடன் சேர்ந்து கொண்டாடி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுடன், '10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன். அனைவரும் தற்போது என் மனைவிகள், என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், லஸ்டின் இமானுவேலை 9 இளம்பெண்கள் வெள்ளை நிற ஆடையில் கையில் பூங்கொத்துடன் சுற்றி வருவதுடன், ஒரே ஒரு இளம்பெண் மட்டும் அவரது மடியில் அமர்ந்திருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!