ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்லும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

#India #America #President #Biden #Visit
Prasu
2 years ago
ஜி 20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்லும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்

2023ம் ஆண்டு ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி-20 நாடுகளின் பிரிதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். 

இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியாவிற்கு வருகிறார். செப்டம்பர் 10 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபின் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள ஜனாதிபதி ஜோ பைடன் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார். ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அவர் இந்தியாவுக்குச் செல்லும் முதல் பயணம் இதுவாகும். 

அடுத்த சில மாதங்களில் என்ன வரப்போகிறது? என்பதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்றார்.

 ஜூன் மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டபோது, செப்டம்பர் மாதம் டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அதிபர் ஜோ பைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4