இந்திய கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கை வருகிறார்!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
பிரபல கிரிகெட் வீரரும், யுனிசெஃப் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பிரதிநிதியுமான சச்சின் டெண்டுல்கர் இலங்கை வரவுள்ளார்.
கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த நிகழ்வு வரும் செவ்வாய்க்கிழமை(08.08) நடைபெறவுள்ளது.
பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ள இலங்கையில், குழந்தைகளின் நிலைமை குறித்து அவர் இதன்போது கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் யுனிசெஃப் நிறுவனத்தின், பிராந்திய நல்லெண்ண தூதராக சச்சின் தனது பங்களிப்பினை தெற்காசிய பிராந்தியம் முழுவதும் வழங்கி வருகிறார்.