இராணுவத்திற்காக அதிகளவு செலவிடும் ரஷ்யா!

#world_news #Russia #War #Lanka4
Dhushanthini K
2 years ago
இராணுவத்திற்காக அதிகளவு செலவிடும் ரஷ்யா!

ரஷ்ய- உக்ரைன் போர் 525 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 

இதற்கிடையே ரஷ்யா இராணுவ செலவீனங்களுக்கான பாதீட்டில் பாரிய தொகையை ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

அதாவது ரஷ்யாவில் இராணுவ செலவீனங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.  2023-க்கான இராணுவ செலவுக்கு ரஷ்யா சுமார்  45 ஆயிரம் கோடி ($54 பில்லியன்) திட்டமிட்டிருந்தது.  

ஆனால் முதல் அரையாண்டிலேயே இதைவிட 12 சதவீதம் அதிகம் செலவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இராணுவ தளவாடங்கள், உபகரணங்கள் தொடர்புடைய உற்பத்திகள் ரஷ்யாவில் அதிகரித்திருக்கும் வேளையில் ஏற்றுமதி வருவாய் குறைந்திருப்பது மட்டுமல்லாமல் பிற தொழில்களும் போரினால் மிகவும் நலிந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!