பஸ் சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்கு விசேட செயலி அறிமுகப்படுத்த தீர்மானம்
#SriLanka
#Bus
#Lanka4
Kanimoli
2 years ago
பஸ் சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்கு விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளது. சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகளுக்கு தெரிவிக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதிகளுக்கு திறமையின்மை புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பேரூந்து விபத்துக்கள் வருடத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எரந்த பெரேரா தெரிவித்தார்.