பதவி விலகுமாறு யாரும் கோரவில்லை:கெஹலிய ரம்புக்வெல
சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகுமாறு தனது மனைவி மற்றும் பிள்ளைகள் மாத்திரமே தன்னிடம் கூறியுள்ளதாகவும், வேறு எவரும் அவ்வாறு கோரிக்கை விடுக்கவில்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி நோட்டீஸ் கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சவால்களில் இருந்து தப்பி ஓடுவதில்லை என்றும், அவற்றை எதிர்கொள்ளும் வலிமை தனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத்துறையில் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாகவும், அவற்றுக்கான தீர்வுகளை சிறந்த முறையில் வழங்குவதற்கு தாம் பாடுபடுவேன் என்றும் அவர் கூறினார்.
சுகாதாரத்துறையின் பிரச்சினைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.