இயற்கையை நேசிக்க தூண்டும் நோக்குடன் சாகச வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளையோர்.

#SriLanka #Lanka4 #famers
Kanimoli
2 years ago
இயற்கையை நேசிக்க தூண்டும் நோக்குடன் சாகச வனப்பகுதிக்கு  அழைத்துச் செல்லப்பட்ட இளையோர்.

இயற்கையை நேசிக்கவும், இயற்கையுடன் இணைந்து வாழவும் தூண்டும் நோக்குடன் இயற்கைச் சாகச வனப்பகுதிக்கு கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் 45 இளைஞர்களும், யுவதிகளும் அழைத்துச் செல்லப்பட்டனர். சவுத்பார், வேப்பங்குளம், காத்தான் குளம், மடுறோட் ஆகிய இலக்குக் கிராமங்களைச் சேர்ந்த இளையோர்கள் இரண்டு நாள் களப்பயணமாக இதனை மேற்கொண்டிருந்தனர்.

images/content-image/1691288472.jpg

 ஷசோ சாகச வனப்பகுதியில்' பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபட்ட இளையோர் இயற்கையின் மகத்துவத்தையும் அதன் இணைந்த வாழ்வையும் அனுபவ ரீதியாகப் பெற்றுக்கொண்டார்கள். அத்துடன், பறவைகள், விலங்குகள், மரம் செடி கொடி என்பவற்றின் இயல்பு வரழ்வு, இயற்கையின் அமைப்பு, அதன் அழகு ஆகியவற்றை இரசிக்கவும், மகிழவும் பழகிக்கொள்ளும் இளையோர் அவற்றின் இருத்தலுக்கும், வாழ்தலுக்கும் மனிதர்களார் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களில் இருந்தும் காப்பாற்றும் பொறுப்புடையவர்கள் எனும் கருத்துக்களை உள்ளடக்கியதாக மடு வனவிலங்கு அதிகாரி திருவாளர் Nஐhதி அவர்களினால் கருத்தமர்வுகள் நடாத்தப்பட்டன. 

images/content-image/1691288483.jpg

 மலை ஏறுதல், குழு விளையாட்டுக்கள், குறி பார்த்துச் சுடுதல், குறிபார்த்து அம்பு எய்தல், ஆகாயக் கம்பியில் தொங்கிச் செல்தல், ஆற்றில் படகோட்டுதல், பூதப்பாதங்களில் நடத்தல், ஒளி இரவு, ஆடல்பாடல் எனப் பல்வேறுபட்ட நிகழ்வுகள் ஊடாக இயற்கையின் அழகையும், இருத்தலையும், வனப்பையும் அனுபவித்து மகிழ்ந்தார்கள். அனுபவத்தின் ஊடாக இயற்கையை நேசிக்கவும், அன்பு செய்யவும் தூண்டப்பட்டுள்ளதை இளையோர் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார்கள். இவ் அனுபவத்தைப் பற்றி 18 வயதுகள் நிரம்பிய செல்வி. பாத்துமா நுப்றா இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார். 

images/content-image/1691288494.jpg

'இயற்கையைப் பாதுகாத்து அதன் அழகையும், வனப்பையும் நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக பல்வேறு விதங்களில் அனுபவித்து இன்புற முடியும் எனக்கற்றுக்கொண்டேன்;;. இரண்டு நாட்களும் எவ்வாறு கடந்துபோனது என்று அறியவும், உணரவும் முடியாதளவிற்கு இயற்கை எங்களை வியப்புறச் செய்தது. இவ் இயற்கையை அழிப்பதும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதும் மனித தவறு என உணருகின்றேன். ஏன் வாழ்வில் இந்த இயற்கையைப் பாதுகாத்து அதன் பயன்களை அனுபவிக்க முயலவேண்டும் எனும் பாடத்தைக் கற்றுத்தந்துள்ளது இந்த நாட்கள்'. என்கிறார்.

images/content-image/1691288507.jpg

 இளையோர் சூழல் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கம் எமது கிராமங்களில் இயற்கைக்கு எதிரான செயற்பாடுகளும், பல்வேறுபட்ட அழிவு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் காத்தான் குளம் கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இயற்கையினை மேம்படுத்தவும் வேண்டியுள்ள தேவைப்பாட்டினை மக்கள் உணர்வதற்கான விழிப்புணர்வு நிகழ்வுகள் காத்தான்குளம் கிராமத்தின் இளையோருக்கும், சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டது.

 எமது முன்னோர்களிடமிருந்து நாம் இந்த இயற்கை எனும் சொத்தினை கடனாப் பெற்றுள்ளோம். இவற்றைப் பாதுகாத்து எமது நாளைய தலைமுறையினரிடம் கையளிக்க வேண்டியது எம் கடமையாகும். இந்த நோக்கத்துடன் காத்தான் குளம் கிராமத்தில் பங்குத்தந்தை அருட்பணி.தவராஜா அவர்களின் ஒத்துழைப்புடனும், வழிகாட்டலுடனும் 30 இளைஞர் யுவதிகளைக் கொண்ட இளையோர் சூழல் பாதுகாப்புக்குழுவினையும், 25 சிறுவர்களைக் கொண்ட சிறுவர் சூழல் பாதுகாப்புக் குழுவினையும் வாழ்வுதயம் உருவாக்கியுள்ளது.

 பின் வருவரும் விடயங்கள் தங்களின் முதன்மைச் செயற்பாடுகளாக தீர்மானிக்கப்பட்டுள்ளன:

 1. கிராமத்தின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தலும், தூய்மையாக்கலும்

 2. மரங்களை நடுதலும் பராமரித்தலும்

 3. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டங்கள் நடாத்துதல்

 4. இயற்யைநேயச் சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல்

 5. மாவட்ட ரீதியாக வாழ்வுதயம் முன்னெடுக்கும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குதல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!