பிரபல வைத்தியசாலையில் கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் மனித எச்சம் கண்டுப்பிடிப்பு!
இலங்கையில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பிரபல சொக்லேட் ஒன்றில் மனித எச்சம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மஹியங்கனை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் கொள்வனவு செய்த சொக்லட் ஒன்றில் மனித விரலின் ஒரு பகுதி காணப்பட்டதாக மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த சொக்லேட் பொதி மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அது நகத்துடன் கூடிய மனித விரலின் ஒரு துண்டு என உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் (06.08) மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி சஹான் சமரவீரவின் ஆலோசனையின் பேரில், பொது சுகாதார பரிசோதகர் சர்மிந்த ரத்நாயக்க மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் குழு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.