உரும்பிராயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிப்பு
#SriLanka
#Jaffna
#fire
Prathees
2 years ago
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையொன்றுக்குச் சென்றபோது, சிலர் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர்.
அயலவர்கள் தீயை அணைக்க முற்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், தீ வைப்பை ஆரம்பித்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தீவைப்பு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், உரியவர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.