குற்றச்செயல்கள் குறித்து ஆராய பொலிஸ் குழு நியமனம்!
#Police
#Crime
#Lanka4
Thamilini
2 years ago
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸின் உத்தரவுக்கமைய பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதன்படி, போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்த எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் மற்றும் அமைச்சுக்கு அறிக்கை சமர்பிக்க குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.