தண்ணீர்க் கட்டணத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு!

#SriLanka #water
Mayoorikka
2 years ago
தண்ணீர்க்  கட்டணத்திற்கு எதிராக மாபெரும் போராட்டத்திற்கு ஏற்பாடு!

அதீத நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

 அதன்படி, நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 தற்போது மக்களின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பொருளாதார அழுத்தமும், மருந்துப் பிரச்சினையும் மக்களை பெரிதும் பாதித்து நோயாளிகளாக மாற்றுகின்றது.

 “அரசாங்கத்தின் அதிகப்படியான வரி விதிப்பால், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன. அதேபோல், பொருளாதார வீழ்ச்சியால் லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் உள்ளனர். எண்ணெய், மின்சாரம், அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையில், மக்களின் அத்தியாவசியப் பொருளான 'தண்ணீர்' கட்டணத்தை அதிகளவில் கட்டும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை நிறைவேற்றப் போவதுடன் மக்களைப் பெரிதும் ஒடுக்குபோராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.

 குறிப்பாக இது குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து மக்களைத் திரட்டி செயற்படுகின்றோம். அதாவது, கடும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர், இதனால் அவர்களின் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.

 இந்த விடயங்களை அரசாங்கம் புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு துரதிர்ஷ்டவசமான உண்மை” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!