நாட்டில் தமிழ் - சிங்கள முரண்பாட்டை ஏற்படுத்த ஜனாதிபதி முற்படுவதாக குற்றச்சாட்டு!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
#13th Amendment Act
Thamilini
2 years ago
ஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் பல்வேறு முரண்பாடுகளை தோற்றுவித்துள்ள நிலையில், சிங்கள தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தனது நிலைப்பாட்டை கூறியுள்ள ரத்தன தேரர், 13 ஆவது திருத்தத்தில் மகாநாயக்கர்களை தலையிடுமாறு வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.