சுழிபுரம் எமது சொத்து: அரசமரம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக வெடித்த போராட்டம்

#SriLanka #Jaffna #Protest
Mayoorikka
2 years ago
சுழிபுரம் எமது சொத்து: அரசமரம் தொடர்பான வர்த்தமானிக்கு எதிராக வெடித்த போராட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாட்டில் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இன்று சுழிபுரத்தில் எதிர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பறாளாய் முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டதுடன் பதாகைகளையும் போராட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.

 தமிழர் தேசத்தின் மீதான திட்டமிட்ட பௌத்த மதமாக்கலை நிறுத்து, எமது நிலம் எமக்கு வேண்டும், சுழிபுரம் என்க சொத்து போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 குறித்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வலி மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், மத குருமார்கள், சைவ அமைப்புக்கள், சிவில் அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

images/content-image/2023/08/1691220260.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!