கிரியுல்ல- குருநாகல் பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
கிரியுல்ல, குருநாகல் பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 2 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பதெனிய ஸ்ரீ விஜேசுந்தராராம விகாரையின் வருடாந்த ஊர்வலம் காரணமாகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரியுல்ல - குருநாகல் பிரதான வீதியில் மாபா கெதர சந்தியில் இருந்து தம்பதெனிய கூட்டுறவு பெற்றோல் நிலையம் வரையிலான ஊர்வலத்தை காண மக்கள் வருவதாலும், அவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களாலும் சில வீதி தடைகள் ஏற்படக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, கிரிஉல்ல நாரம்மல பிரதான வீதியில் நாரம்மலை நோக்கி வரும் அனைத்து கனரக வாகனங்களும் தம்பலஸ்ஸ சந்தி ஊடாக அலவ்வ வீதியில் பிரவேசிக்க முடியும்.
நாரம்மலை நோக்கி வரும் அனைத்து இலகுரக வாகனங்களும் முதுகல சந்தியிலிருந்து பொதுப்பிட்டிய குடாகம்மன வீதி ஊடாக அலவ்வ பிரதான வீதிக்குள் பிரவேசிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு நாரம்மல வீதியில் குருநாகல் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் மஹரகம சந்தி ஊடாக அலவ்வ பிரதான வீதிக்குள் பிரவேசிக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.